‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் ஒருவர் கடமை நேரத்தில் மது அருந்தியிருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இன்று (ஒக். 25) பிற்பகல் அனுராதபுரத்தில் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்த வேளையில், குறித்த அதிகாரி மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் பின்னர் நீதிமன்றத்தில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், யாழ்தேவி ரயிலுக்காக புதிய கட்டுப்பாட்டாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, ரயில் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது