யாழில் வள்ளிக்கும்மி ஆற்றுகை நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தினரின் ஈழத்திற்கான பயணத்தின் ஓர்அங்கமாக வள்ளிக்கும்மி அரங்கேற்ற நிகழ்வு நல்லூர் சிவகுரு ஆதீனவளாகத்தில் நாளை (செப். 04) வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்குஇடம்பெறவுள்ளது.

தமிழகத்தில் இருந்து வருகைதரும் 65 கலைஞர்கள் குறித்த ஆற்றுகைநிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர்.

வள்ளிக்கும்மி என்பது முருகப்பெருமான் மற்றும் வள்ளி ஆகியோரின்வாழ்க்கையை, குறிப்பாக வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலானகாலகட்டத்தில் பாடி, கும்மியடித்து ஆடும் ஒரு நாட்டுப்புறக் கலை ஆகும். தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் தனிச்சிறப்பாக இவ் கும்மு ஆட்டம்காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறுஅழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் அறிய 0772220103 (சிவகுருஆதீனம்) என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளமுடியும்.

Share this Article