யாழில் ரயில் மோதி ஒருவர் மரணம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியானகுடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

சுண்டுக்குழி பகுதியை சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58) என்பவரேஇவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வாய் பேச முடியாதவர் , இந்நிலையில் இவர்நேற்றையதினம்(நவம்பர்01) கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையை கடக்கமுற்பட்டவேளை ரயில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவஇடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிநமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின்பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

Share this Article