யாழில் ரணிலுக்கு ஆதரவாக அமைச்சர்கள் முழு வீச்சில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சுசில் பிரேமஜயந்தா நேற்று (செப் 07) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 8 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஸரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் “ரணிலை அறிந்து கொள்வோம்” எனும் பிரசார நிகழ்ச்சி ஆரம்பமாகின.

இந்த நிகழ்வை யாழ் மத்திய பேரந்து நிலையத்தில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தா ஆகியோர் தொடங்கி, நகரின் பல பகுதிகளில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

“ரணிலை அறிந்து கொள்வோம்” என்ற நிகழ்வானது இலங்கையின் 09 மாகாணங்களில் உள்ள 160 தேர்தல் தொகுதிகளை, 341 உள்ளுராட்சி மன்றங்களை, 4984 வட்டாரங்களை, 14026 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை மற்றும் 53,896 கிராம வீதிகளை உள்ளடக்கி, ரணில் விக்ரமசிங்கவின் அரசியல், சமூக மற்றும் கலாசார பாத்திரத்தை மக்களுக்கு அறிய வாய்ப்பு அளிக்கிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ரணில் விக்ரமசிங்கவின் “இயலும் ஸ்ரீலங்கா” விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் நேற்று (செப் 07) யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டன. இதன்போது, ரணில் விக்ரமசிங்கவின் சின்னமான “காஸ் சிலிண்டர்” குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

Share this Article