முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(செப்ரெம்பர் 11) வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டதுடன், பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் எஸ்.ஜாமினியால் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண விவசாயத் தினணக்களத்தினால் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அம்மாச்சி உணவகத்தினை நிறுவி நஞ்சற்ற உள்ளூர் உணவு உற்பத்திகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் இவ் உணவகம் சிறப்பாக இயங்கி வருகின்ற நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்( நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு எஸ்.குணபாலன்(காணி), மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.