முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும்அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந் நிறுவன அதிகாரிகளுடன் விசேடகலந்துரையாலில் ஈடுபட்டார்.
நேற்றைய தினம் (ஏப்ரல் 17) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன்மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் அரசசார்பற்ற நிறுவனங்களின் கடந்தகாலசெயற்பாடுகள் மற்றும் நிகழ்கால வேலைத்திட்டங்கள், எதிர்கால திட்டங்கள்தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் குறித்த நிறுவனங்களின்குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான உரிய தீர்வுகளைதுறைசார்ந்தோருடன் பேசி பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.
இந்த கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர்எஸ்.குணபாலன்( நிர்வாகம்) , மேலதிக மாவட்ட செயலாளர் சி.ஜெயகாந் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர், அரசசார்பற்றநிறுவனங்களின் அதிகாரிகள் பிரதிநிதிகள் எனப் பலரும்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.