முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பெரும்போக செய்கை தொடர்பானகலந்துரையாடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டதண்ணிமுறிப்பு ,குமுழமுனை 2024 – பெரும்போக செய்கை தொடர்பான கலந்துரையாடல் குமுழமுனை கமநல அபிவிருத்தி நிலைய வளாகத்தில்இன்றைய தினம் (செப். 24) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்எஸ்.குணபாலன் கலந்து கொண்டதுடன் இம்முறை பெரும்போக செய்கைக்காக  2703 எக்கர்  வயல்நிலம் அனைத்தும்  பயிர்செய்வதற்கான அனுமதியையும்வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் , உத்தியோகத்தர்கள் , விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article