முருகேசு வேலுப்பிள்ளை (செட்டி வெள்ளையர்)

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

 

பிறப்பு – 27.12.1935
இறப்பு – 25.09.2023

முருகேசு வேலுப்பிள்ளை (செட்டி வெள்ளையர்)

நெடுந்தீவு மேற்கு, 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் – பூதர்மட வீதி, நீர்வேலி தெற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு வேலுப்பிள்ளை அவர்கள் இன்று (25.09.2023) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு – சிவகாமி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம் – தங்கம்மா தம்பதியரின் மருமகனும், சிவகாமிப்பிள்ளையின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சீதேவிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை, கந்தப்பு மற்றும் தங்கம்மா (கனடா) ஆகியோரின் சகோதரரும், துரைசிங்கம் (கனடா), லோகேஸ்வரன் (ஓய்வுநிலை பரிசாரகர் – அச்சுவேலி வைத்தியசாலை), கருணாதேவி (கனடா), கோணேஸ்வரி (கோப்பாய்), தோகைநாயகி (ஆசிரியர் – அனுச்சங்குளம் மகா வித்தியாலயம் – மல்லாவி), நவரட்ணசிங்கம் (நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், லதா (கனடா), நிர்மலா (ஆசிரியர் – யா/கோப்பாய் சரவணபவானந்த வித்தி), கரிகரன் (கனடா), காலஞ்சென்ற பாலச்சந்திரன், சதானந்தம் (மல்லாவி), நித்தியகலா (ஆசிரியர் – ஸ்ரீ ஸ்கந்தா வித்தியாலயம் – நெடுந்தீவு) ஆகியோரின் மாமனாரும், ஆதவன், மகிழன், ஆரதி, விகிர்ஷன், சுதர்ஜனன், அபிராம், கஜானன், அபிநயன், சங்கவி, கிருஸ்ணராஜ், ஜனகராஜ், ஜசிராஜ், கமலினி, பிரசாத், அகவளவன், அகவதனன், அகப்பிரியன், வஸ்மிகன், லக் ஷயன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.09.2023) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பூதர்மட வீதி,
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி.

தகவல்-
குடும்பத்தினர்
மகன் (சிறி) – 0778332311
பேரன் (றங்கன்) – 0772804948

Share this Article