முன்பள்ளி சிறுவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் கற்றல் உகரணங்கள் இன்று(ஜூலை 24) வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டுகளில் 10 முன்பள்ளிகளுக்கும் இந்த ஆண்டு 6 முன்பள்ளிகளுக்கும் இவ் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்ட்டது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் எமது பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை ஊக்கப்படுத்தும் நோக்கில் இவ் உபகரனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நல்லொழுக்கமுள்ள சமூகக் கட்டமைப்பிற்கு கல்வி என்பது மிகப் பிரதான ஒன்றாக உள்ளதுடன் அத்தகைய கல்வியின் மேம்பாடே சமூகத்தின் மேம்பாட்டிற்கு அடித்தளமாக இருப்பதால், அத்தகைய கல்வியினை எமது பிரதேச மாணவர்கள் தமது சிறு பிள்ளைப் பருவத்தில் இருந்தே பெற்றுக் கொள்வதனை உறுதிப்படுத்த எமது அலுவலகம் பல முயற்சிகளை எடுத்து வருவதுடன், காலத்திற்கு காலம் பல செயற்திட்டங்கள் ஊடாக சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல மில்லியன் பெறுமதியான உதவித் திட்டங்களை கடந்த காலங்களில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.