சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் முன்னாள் குற்றப்புலனாய்வு பணிப்பாளர் சானி அபயசேகரா சார்பாக மேன் முறையீட்டு நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மீளாய்வு மனுவை விசாரணை செய்த மேன் முறையீட்டு நீதி மன்றம் பிணையில் விடுதலை செய்தது.
இந்த பிணை மனு விசாரணை நேற்றைய தினம் மேன் முறையீட்டு நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி அவர்களது ஆலோசனைக்கு அமைய சிரேஷ்ட சட்டத்தரணி விரான் குரே (Viran Corea) அவர்கள் வாதிடுகையில் ஷானி அபயசேகர அவர்கள் நீரழிவு உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு மரடைப்பு நோய் ஏற்பட்டு தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இவருக்கு பிணைச் சட்டத்தின் கீழ் பிணை வழங்கப்பட வேண்டும் எனும் வாதத்தினை முன்வைத்தார்.
முன்னாள் குற்றப்புலனாய்வு பணிப்பாளரான ஷானி அபயசேகர அவர்கள் உலகின் தலை சிறந்த புலனாய்வு அதிகாரி (INTERPOL) என சர்வதேச விருதினை பெற்றவர் என்பதுடன், பிரசித்த வழக்குகளான கொழும்பில் 05 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தலில் கடற்படையினருக்கு எதிராக கொழும்பு மேல் நிதி மன்றினால், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஊடகவியலாளர் பிரகீத் எக்னாலிகொட (prageeth Eknaligoda) கடத்தல் வழக்கு றோயல் பாக் கொலை வழக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க கொலை முயற்சி வழக்குகளில் மூத்த புலனாய்வு அதிகாரியாக செயற்பட்டவர் என்பதையும் நீதி மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மேலும் தனது சமர்ப்பணத்தில் கொவிட் 19 தற்போது மிக வேகமாக பரவி வருவதால், இந் நிலையில் சிறையில் வைத்திருப்பது சட்டரீதியற்ற செயற்பாடாகும். ஏன வாதிட்டதுடன், உள்நாட்டு தீர்ப்புகளுடன், பல சர்வதேச வழக்குகளின் தீர்ப்புக்களையும் நீதி மன்றிற்கு கையளித்து பிணை வழங்கும் படி தனது கோரிக்கையினை முன் வைத்தார்.
இவ்வழக்கில் சட்டமா அதிபர் சார்பாக அஜராகிய பிரதி மன்றாடி நாயகம் றோகன்த அவர்கள் ஷானி அபயசேகர விசாரணைகள் இன்னும் நிறைவடைய காரணத்தினால் அவருக்கான பிணை வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனையினை தெரிவித்தார்.
எனினும் மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரனி பிணைச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஷானி அபயசேகர அவருக்கு எதிராகவுள்ள சாட்சிகளில் தலையீடு செய்வார் அல்லது நீதி மன்றுக்கு அல்லது விளக்கத்துக்கு சமூகமளிக்க மாட்டார் என தகுந்த காரணங்கள் அரச தரப்பினரால் முன்வைக்கப்படாமையால் ஷானி அபயசேகர அவர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்பதை மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
ஷானி அபயசேகரவுக்கு பிணை வழங்குவதற்கு அரச தரப்பில் கடும் ஆட்சேபனை வழங்கப்பட்ட போதும், விடயங்களை ஆராய்த நீதியரசர்கள் ஷானி அபயசேகர சார்பக நீதி மன்றில் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கை கொவிட் 19 தாக்கம் உட்பட அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு 25,000.00 ரொக்க பிணையிலும் பயணக் கட்டுப்பாட்டினையும் விதித்து பிணை வழங்கினார்.
இவ்வழக்கில் சட்டமா அதிபார் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரனி றொகன்த அபயசூரிய அவர்கள் ஆஜராகியதுடன், மனுதாரர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரனி கௌரி சங்கரரியின் ஆலோசனைக்கு அமைய சிரேஷ்ட சட்டத்தரனி விரான் குரே, சட்டத்தரனி ஆர்னோல்ட், பிரியந்தன் தர்மஜா தர்மராஜா பிருந்தா சந்திரகேஷ் ஆகியோர் அஜராகினர்
முன்னாள் குற்றப்புலனாய்வு பணிப்பாளர் ஷானி அபயசேகரா கைதும் தடுத்து வைப்பும் ஐரோப்பிய பாரளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட பிரேரணையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதும், குறிப்பிடத்தக்கது.