கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட இருவர் சுகயீனமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் யாழ்.தென்மராட்சியை சேர்ந்த 3 பெண்களும் தடுப்பூசி பெற்றுக்கொண்டு, பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் திடீர் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களில் இருவருக்கு முகம் வீக்கமடைந்துள்ளதாகவும், அவர்களை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதானா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.