முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் நேற்று (15-04) காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் ஒருவர், ஆள் நடமாட்டமற்ற வெற்றுக்காணி ஒன்றில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார். இது குறித்து உடனடியாக அப்பகுதி கிராம அலுவலருக்கும் பளை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த இளையவன் நல்லதம்பி (வயது 71) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட முதியவரின் உடலில் அடிக்காயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து பளை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.