மீசாலையில் விபத்து இதனால் சில பகுதிகளில் மின் தடை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் கண்டி ஏ 9வீதியில் தென்மராட்சி மீசாலையில் வாகன விபத்து ஒன்று இன்று இரவு (ஜீன் 30) இடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தென்மராட்சியின் சில பிரதேசம் இருளில் மூழ்கியுள்ளது.

கண்டி வீதியின் மீசாலை அண்மித்த பகுதியில் வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

அதனால் அருகில் இருந்த மின் கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் சாவகச்சேரி மீசாலை கொடிகாமம் போன்ற பிரதேசங்களில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article