2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டணத்தில் 6.8 சதவீதஅதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும்எழுத்துப்பூர்வமாக ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
வாய்மூல கருத்துகளுக்காக 9 மாகாணங்களை உள்ளடக்கிய 9 பொதுஆலோசனைகள் நடத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.
வாய்மூல கருத்து அமர்வுகள் 2025 செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதிஆரம்பமாகவுள்ளது.
பொது மக்களின் எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் மற்றும் கருத்துகளையும்பின்வரும் வழிகள் மூலம் 2025 அக்டோபர் மாதம் 07ஆம் திகதிக்கு முன்சமர்ப்பிக்கலாம் என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மின்னஞ்சல் – mailto:info@pucsl.gov.lk
வட்ஸ்அப் – 076 427 1030
பேஸ்புக் – www.facebook.com/pucsl
தபால் –
மூன்றாவது மின்சார கட்டணம் குறித்த பொது மக்கள் ஆலோசனை 2025
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு 6வது மாடி, இலங்கை வங்கி வணிக கோபுரம், கொழும்பு 3
ஆலோசனை அறிக்கை மற்றும் முன்மொழிவை பின்வரும் இணைப்பில்காணலாம். https://www.pucsl.gov.lk/proposed-electricity-tariff-revision-2025-sept/