நாடளாவிய ரீதியில் பரந்து இருக்கின்ற கைப்பணியாளர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் வழிகாட்டுதலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் நடாத்தப்படும் தேசிய கைப்பணிப் போட்டி மற்றும் ஜனாதிபதி விருது வழங்கல் விழா 2023 இம்முறையும் நடாத்தப்படவுள்ளது.
மாகாண மட்டத்திலான போட்டிகள் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 15,16 ஆம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளது.
போட்டியில் பங்குபற்ற ஆர்வமுள்ள கைப்பணியாளர்கள் விண்ணப்பப் படிவங்களை மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள வடமாகாணத் தொழிற்துறைத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவையின் உத்தியோகத்தர்கள் ஊடாக பெற்று போட்டிக்கு விண்ணப்பிக்க முடியும்.
போட்டிக்குரிய ஆக்கங்களை நவம்பர் மாதம் முதலாம் வாரம் பிரதேச செயலகங்களில் ஒப்படைப்பதற்கு தயாராக இருத்தல் வேண்டும்.
முன்வைக்கக்கூடிய கைப்பணி ஆக்கங்கள்..!
1. களிமண் சார்ந்த ஆக்கங்கள்,
2. தும்பு, ஓலை, புல் சார்ந்த ஆக்கங்கள்,
3. பிரம்பு, மூங்கில்; சார்ந்த ஆக்கங்கள்,
4. உலோகக் கைப்பணி ஆக்கங்கள் (வார்ப்பு, செதுக்கல்),
5. கைத்தறி நெசவு சார்ந்த ஆக்கங்கள்,
6. சங்கீத உபகரணங்கள் ஆபரணங்கள்,
7. துணிகளினாலான ஆக்கங்கள் (பச்வேர்க்,எம்ரொய்டர்) பற்றிக், ரேந்தை
போன்ற துறைகளில் உங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்க முடியும். இதிலிருந்து மாகாண மட்டத்தில் தெரிவு செய்து தேசிய மட்டம் வரை சென்று பெறுமதிமிக்க பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பனவற்றை பெற்றுக்கொள்வதுடன் சிறந்த கைப்பணியாளர் என்ற அடையாளம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
போட்டி நிபந்தனை: http://craftscouncil.gov.lk/wp-content/uploads/2019/12/ශිල්ප-අභිමානී-2023-තරග-කොන්දේසි-සහ-තරග-විනිශ්චය-නිර්ණායක_tamil.pdf
விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்து பூரணப்படுத்தி பின்வரும் அலுவலகத்தில் ஒப்படைக்கவும்!
http://craftscouncil.gov.lk/wp-content/uploads/2019/12/ශිල්ප-අභිමානී-2023-තරගයට-ඇතුළත්-වීමේ-අයදුම්පත්රය_tamil.pdf
மேலதிக விபரங்களுக்கு:-
தேசிய அருங்கலைகள் பேரவை,
மாவட்ட செயலகம்,
யாழ்ப்பாணம் – 0212216156, வவுனியா 0776302065, மன்னார் 0776034349, கிளிநொச்சி 0778031703, முல்லைத்தீவு 0775736423
மாகாணக் காரியாலயம் மாவட்டச் செயலகம்,
யாழ்ப்பாணம்.
0212216156 / 0773520735 / 0772145325 / 0776034349
சில்ப அபிமானி
போட்டிக்குரிய ஆக்கங்களை சேகரிக்கும் வாகனம் நவம்பர் 10ம் திகதி வரவிருப்பதால் தயாராக இருக்கும் உங்கள் ஆக்கங்களை விண்ணப்ப படிவத்துடன் இம்மாதம் 1ம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை தங்கள் பிரதேச செயலக தொழிற்துறை தினைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் அல்லது மாவட்ட செயலக தொழிற்துறை தினைக்களத்தில் ஒப்படைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன் பின்னர் ஆக்கங்களை பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.