மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் எற்பாடு செய்த மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியின் இறுதி சுற்று போட்டி முடிவில் இடம்பெற்ற மோதலில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இறுதி சுற்று நேற்று (டிசம்பர் 3) மாலை மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த போட்டியானது ஏ.கே.ஆர்.FC அணிக்கும் அயிலன் FC அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதன் போது அயிலன் FC அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி முடிவடைந்த நிலையில் சில நபர்களுக்கிடையில் மைதானத்தில் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து பாரிய மோதலாக இடம்பெற்றது.
நீண்ட நேரத்தின் பின்னர் மோதல் தனித்த நிலையில் பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்று போட்டியாளர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.
எனினும் போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் பள்ளி முனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என பலர் மைதானத்தைச் சூழ்ந்த பகுதிகளில் நின்ற போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வந்த பொலிஸார் வீதியில் சென்றவர்கள் மற்றும் மைதான பகுதிகளில் நின்றவர்களை தடியினால் தாக்கியதாக குற்றம் சுமத்தியதோடு,பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சினை முடிந்து நீண்ட நேரத்தின் பின்னர் பொலிஸார் வந்து மக்கள் மீது தாக்கியதை மக்கள் உண்மையாக கண்டித்துள்ளனர்.
மேலும் குறித்த மோதலின் போது காயமடைந்த 2 பேர் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.