மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புத்தாண்டு காலத்தில் மதுபோதையிலும் கவனியீனமாகவும் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.

2026 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கடந்த 4 மாத காலப்பகுதிக்குள் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 248 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி மதுபோதையிலும் கவனியீனமாகவும் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வீதிப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பீ.ஜே. சேனாதீர தெரிவித்தார்.

அதேவேளை, புத்தாண்டு பிறப்புடன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றும் நீர்நிலைகளில் கவனியீனமான முறையில் நீராடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

Share this Article