மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின் போது, இடிபாடுகளுக்குள் இருந்து இராணுவத்தினர் கண்டுபிடித்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட 300,000 ரூபாய் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் என்பனவே அதற்கு சொந்தமான உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர், முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த பெறுமதியான பொருட்களைக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

மண்சரிவு காரணமாக முழுமையாக அழிந்துபோன ஒரு வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்து குறித்தப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அவை உரிமையாளரிடம் இராணுவத்தினரால் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது

Share this Article
Leave a comment