மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொது சத்திர சிகிச்சை நிபுணர் Dr. ரி.நிமலரஞ்சன் மரணம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மட்டக்களப்பில்  பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர்வைத்தியர் நிமலரஞ்சன்  காலமானார்.

மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட  காலமாக விசேடசத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் ரி.நிமலரஞ்சன்அவர்கள்   திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்றையதினம் (செப்13) இயற்கை எய்தினார் .

திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும்கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்அர்ப்பணிப்பான சேவையினை புரிந்த இவர் மட்டக்களப்பு மக்களாலும் போதனாவைத்தியசாலை சமுகத்தாலும் மறக்கமுடியாதவர்.

தனது வைத்தியத் திறமையினால்  நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழிசெய்த  வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல  முழுநாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

Share this Article