பனைத் திருவிழா இன்று (மே 26) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொன்னாலை, திருவடிநிலையில் இடம்பெறவுள்ளது.
அழிவடைந்து வரும் பனையைக் காக்கவும், பனைசார் உணவு மற்றும் ஏனைய நன்மைகளை அனுபவித்து ஆரோக்கியம் பெறவும், பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கடத்தும் நோக்கிலும் ‘பனை இருந்தால் பஞ்சம் இல்லை’ எனும் தொனிப் பொருளில் பனைத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பனைசார் உணவுகளை ருசி பார்த்தல், நுங்கு அல்லது பதநீர் அருந்துதல், பனை பற்றிய உரையாடல்கள், போட்டிகள், விளையாட்டுக்கள் மற்றும் அடுத்த தலைமுறைக்குப் பனை பற்றிய புரிதலைக் கடத்துதல் எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும், அனைவரும் குடும்பமாக இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.