பொது நிதியை தவறாகப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்கள் வரிக் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (ஜூன்02) வலியுறுத்தினார்,

வரி வருவாய் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், பொது நிதியை தவறாகப்பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்உறுதியளித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கடக்கிழமை (ஜூன் 2) காலை நடைபெற்ற‘தேசிய வரி வாரத்தின்’ தொடக்க விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, பொதுப்பணத்தின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தனதுசொந்த உத்தியோகபூர்வ செலவினங்களை முடிந்தவரை குறைத்துள்ளதாகக்கூறினார்.

மோசடியால் நிலைநிறுத்தப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை ஒழிப்பதாகவும், பொது நிதியைப் பாதுகாக்க ஒரு சட்டபூர்வமான மற்றும் பொறுப்புணர்வுள்ளஅமைப்பை நிறுவுவதாகவும் அவர் உறுதியளித்தார்

Share this Article