பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலில் மை பூசப்படும்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின் போது வாக்காளர்களின் இடது கையின் ஆள்காட்டி விரலிலேயே, ‘மை’ அடையாளமிடப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தாா்.

பெருவிரல் மற்றும் சுண்டுவிரல் என்பன கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும்எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட்டதால் பொதுத்தேர்தலின் போது இடது கையின் ஆள்காட்டி விரலை பயன்படுத்தத்தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தாா்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக்குறிப்பிட்டார்.

Share this Article