பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி உதயம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து உருவாக்கிய “பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி”யின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த கூட்டணியின் தொடக்க விழா இன்று (செப் 05) காலை பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமை வகித்தார்.

அதன்பின்னர், கிண்ணம் சின்னத்துடன் “பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி” என்ற புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய கூட்டணிக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this Article