ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கரைவலை மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08/02) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி, மீனவர் குழுவொன்று கடந்த 5 ஆம் திகதி இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தது.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அவை தோல்வியடைந்த காரணத்தினால், இவ்வாறு தொடர்ச்சியாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.