புதிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயர்பஸ் விமானத்தை பார்வையிட காலி முகத்திடலில் திரண்ட மக்கள்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 பிரான்சின் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய A330-200 வகை எயர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது.

இன்று (ஜூன் 04) காலை 8.15 முதல் 9.30 மணி வரை, இந்த விமானம் கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து பாணந்துறை வரை வானத்தில் தாழ்வாக பறந்து, மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இலங்கையை உலக நாடுகளுடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயண சேவைகளுக்காக இவ்விமானம் சேவையில் இணைக்கப்பட உள்ள நிலையில், அதன் வருகையை நேரில் காணும் நோக்குடன் காலி முகத்திடலில் பெரும் மக்கள் கூட்டம் திரண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article