புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தில் வாழ்ந்துவருகின்ற சண்முகம் என்பவருக்கு சொந்தமான சினைப்பசுவொன்று கடத்தப்பட்டு கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ளதாக இன்று காலையில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களிடம் நேரடியாக தகவல் வழங்கப்பட்டிருந்தது .
விரைந்து செயற்பட பிரதேச சபை உறுப்பினர் நாவலன் குறிகாட்டுவான் பொலிஸ் நிலையத்தினரையும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்க உதவியிருந்தார் . அத்தோடு பாதிக்கப்பட்டவரின் சகோதரரான நாகராசா ( புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ) வுக்கு சொந்தமான பசுவொன்றும் சம்பவ இடத்திலிருந்து உயிரோடு மீட்கப்பட்டது .
தீவிர விசாரணைகளின் பின்னர் இன்று மாலை அப்பகுதியில் வாழ்கின்ற கிருபா என்கிற நபர் ஊர்காவற்துறை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டார் .
அத்தோடு அவரது வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிராம் அளவுடைய கேரளா கஞ்சாவும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது . இந்நபர் நீண்டகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிசார் கூறுகின்றனர் . அத்தோடு மேற்படி சினைப் பசுவின் இறைச்சியை விற்பனை செய்வதற்கு உதவியிருந்த இருநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .