யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றதுடன் இவற்றில் ஏற்படும் மரணங்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது
பிரதேச செயலக பிரிவுவாரியாக பார்க்கும் போது சாவகச்சேரியில் 14, நல்லூரில்07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன.
எனவே இந்த புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்என நேற்று (ஜனவரி31) இடம்பெற்ற யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.