பிரான்சில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி : பொதுத் தேர்தல் வேட்பாளர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பிரான்சில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 05 இலட்சம் ரூபா மோசடிசெய்த சம்பவம் தொடர்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர்நேற்றையதினம் (நவம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் ஊடாகயாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின்அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்ஒருவர் ஆவார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர்ஆவார்.

சந்தேக நபருக்குச் சொந்தமாக எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்புநிறுவனமும் இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article