பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமலுக்கு பிணை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை29) பிற்பகல் நீதிமன்றில் ஆஜரானதையடுத்து பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்குஎதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுபின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை(ஜூலை28) மீண்டும் அழைக்கப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில்ஆஜராகாமல் இருந்துள்ளார்.

இதனால் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகபிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் காலை தனிப்பட்ட தேவைக்காகமாலைதீவுக்கு சென்றிருந்ததால், இன்றைய தினம் மீண்டும் நாடு திரும்பிபிடியாணை உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்து அம்பாந்தோட்டை நீதவான்நீதிமன்றில் ஆஜரானதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது

Share this Article