சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இலங்கையின் மேலும் 15 பாதாள உலக குழுஉறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவில் அவர்கள்கைதாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலஇன்று (செப். 11) பாராளுமன்றில் தெரிவித்தார்.
அதன்படி, இந்த பாதாள உலக குழு உறுப்பினர்களை அந்த நாடுகளின் சட்டநடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைஎடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.