பாடசாலை மாணவர்களது “சீசன்” டிக்கட்டுக்கு நிவாரணம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாடசாலை மாணவர்களின் பருவகால சீட்டுக்கு நிவாரணம் வழங்குவதுதொடர்பான புதிய ஆலோசனைகளை உள்ளடக்கிய விசேட அமைச்சரவைப்பத்திரம், அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக போக்குவரத்துநெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துலகுணவர்தன தெரிவித்தார்.

தற்போதைய நிவாரண உதவியில் மாற்றத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்என்பது தொடர்பாக புதிய அமைச்சரவை பத்திரம் அமைந்துள்ளதாக அவர்தெரிவித்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாடசாலைமாணவர்களுக்கான பருவச் சீட்டு நிவாரணம் வழங்கும் முறைமையைமாற்றியமைப்பது தொடர்பாக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப்பத்திரத்துக்கமைய குழுவொன்றை நியமித்த நிதி அமைச்சு, அக்குழுவினூடாகபெற்றுக்கொண்ட பரிந்துரைகளை அமைச்சரவைக்குசமர்ப்பித்துள்ளதாகதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

மேலும், ஏனைய பிரேரணைகள் உட்பட புதிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றுஅமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share this Article