பருத்தித்துறையில் இன்று 14 பேருக்கு கொரோனா…!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
வங்கி முகாமையாளர், நகர சபை ஊழியர்கள் உட்பட நேற்று வடமராட்சி பகுதியில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று பருத்தித்துறை நகர் பகுதியில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் வங்கிகள், தபால் நிலைய ஊழியர்கள், நகர சபை மற்றும் கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் என ஒவ்வொரு நிறுவனங்களில் இருந்தும் 5 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.
மேலும் வல்வெட்டித்துறை பகுதியில் நோய் அறிகுறிகளுடன் வருகை தந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Share this Article