நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கு கொப்பிகள் அன்பளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின்  கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் ஒருதொகுதி அப்பியாசக்கொப்பிகளை இன்றையதினம் (16/12) அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் பழையமாணவனும், ஓய்வுநிலை அலுவலருமான சரவணமுத்து பேரின்பநாதன் அவர்கள் இடரால் பாதிப்படைந்த மாணவர்களுக்கு இலட்சரூபாய் பெறுமதியான அப்பியாசக்கொப்பிகளை வழங்கிய முன்மாதிரியான செயற்பாட்டிக்கு பாடசாலைசமூகம் நன்றிபாராட்டியுள்ளது.

வித்தியாலய உள்ளக மண்டபத்தில் அதிபர் ஐ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைபவரீதியாக  அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டதுடன், இதன்போது அன்பளிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்திருந்தனர்.

Share this Article
Leave a comment