நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் சிறார்களுக்கான வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு 17 (29/12/2025) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமுக நிலையத்தின் இரகுபதி நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் , கதை கூறல் மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் என்பன நிகழ்வின் அமர்வு – 17 இல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இதுவரையும் இடம்பெற்ற 16 அமர்வுகளில் தொடர்ச்சியாக அதிக அமர்வுகளில் கலந்துகொண்ட 05 சிறார்களுக்கான சிறப்பு நினைவுச் சின்னமும், கற்றல் உபகரணங்கள் கொள்வனவுக்கான பரிசு அட்டையும் (Gift voucher) வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதேவேளை சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி”வாசிப்பு” எனும் நிகழ்விற்கான வழிகாட்டல் மற்றும் அனுசரணையினை“வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழு”வினர் வழங்கி வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
எனவே அனைத்து சிறார்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றனர் நிலைய நிர்வாகத்தினர்.