நெடுந்தீவு மகாவித்தியாலயம், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் ஆகியவற்றில காணப்படும் ஆங்கில ஆசிரியர்கள் தேவையினைக் கருத்திற் கொண்டு புலம் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகம் இன்று முதல் (ஜீலை 06) இரண்டு பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது.
நெடுந்தீவு கோட்டக்கல்விப் பணிமனை, மற்றும் தீவக வலயக் கல்விப்பணிமனையின் அனுமதிகளைப் பெற்று அதற்கமைவாக பாடசாலைகளில் இரண்டு ஆசிரியர்களும் இணைக்கப்பட்டுள்ளனர் ஆங்கில ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்கள் ஆங்கில அறிவினைப் பெற்றுக் கொள்வதும் பரிட்சைகளில் சித்தியடைவதும் குறைவாகவும் சவாலகவும் காணப்பட்டது அத்தேவைகளைக் கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் நியமித்தமை எதிர்கால தீவக கல்விக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.