கிளி மக்கள் அமைப்பும் , நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமும் இணைந்து இ. வ. சு. திருநாவுக்கரசு , ஆசிரியர் – கல்வி அறக்கட்டளை நிதியம், நெடுந்தீவு அனுசரணையுடன் நடாத்திய சிறப்பு மருத்துவ முகாமில் ( 30.03.2024) கண் சத்திரசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில்
இன்று ( 09.04.2024 ) யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்காக அழைத்து வரப்பட்ட 27 பேருக்கும் சகல விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு அதில் 25 பேருக்கு நாளையதினம்( 10/04) காலை கண் சத்திரசிகிச்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.