நெடுந்தீவில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் உயிரிழந்த நெடுந்தீவு சார்ந்த நவரத்தினம் ஐங்கரன் (வயது 37) என்பவரின் இறுதி நிகழ்வு நாளை (பெப்ரவரி 27) வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவு மேற்கிலிருந்து உழவு இயந்திரத்தில் பயணித்த அவர், நேற்றுக்கிழமை (பெப்ரவரி 25) இரவு, பிரதேச வைத்தியசாலைக்கு அருகிலுள்ள மதவடியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்ததனால் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், முதலில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அன்னாரின் உடல், யாழ் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பிறகு நேற்றுமாலை (பெப்ரவரி 25) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.