மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, நீர் கட்டணத் திருத்தம் இந்த மாதஇறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சுதெரிவித்துள்ளது.
நீர் கட்டணத்தைக் குறைப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தனக்குக் கிடைத்ததாக அதன்செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இது தொடர்பான முன்மொழிவு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம்வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு கட்டண திருத்தம் குறித்த முடிவைஅறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த முறை நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதிற்கு இடையில்குறைக்க முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைதெரிவித்துள்ளது.