நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி – ஓவியப் போட்டி.

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நல்லூர் உற்சவ காலத்தின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக வஸ்பர்(WASPAR) செயற்றிட்டம் நிகழ்த்தும் நீர்வளம் பேணல் பற்றிய பத்து நாள் சிறப்புக்கண்காட்சியுடன் சார்ந்தொழுகும் வகையில் சிறகுகள் அமையம் முன்னின்றுநடாத்தும் ஓவியப்போட்டி

📚 பிரிவு 1: தரம் 1 – தரம் 5

Theme Title Suggestion:

“என் கிராம தண்ணீரின் கதை ” (Story of water in my Village)

“நீர் இல்லாது வாழ்க்கை இல்லை” (No Water-  No Life)

📚 பிரிவு 2: தரம் 6 – தரம் 8

Theme Title Suggestion:

“நிலத்தடி நீர் – கண்ணுக்குத் தெரியாத செல்வம் ” (Groundwater:  Our hidden Treasure)

“நீர் பாதுகாப்பு – நம் பொறுப்பு” (Protecting water is Our  Responsibility)

“நிலத்தடி நீர் – நம் எதிர்காலம்” (Groundwater: Our Future)

📚 பிரிவு 3: தரம் 9 – தரம் 13

Theme Title Suggestion:

“நிலத்தடி நீர் – உயிரின் அடிக்கல்” (Groundwater: Foundation of Life)

“நீர் தட்டுப்பாட்டை தடுக்க – இன்று செயற்படு”  (Groundwater: Sustenance of the Environment)

“நிலத்தடி நீர் – சூழலின் அடிநாதம்” (Groundwater: Sustenance of the Environment)

நிபந்தனைகள்:

ஆக்கங்கள் அனைத்தும் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

சிறகுகள் அமையம், இல 21/2 குமாரசுவாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

மேலதிக விபரங்களுக்கு சங்கவி – 077 218 1459  | அபிநயா– 076 244 4504

மாணவர்களின் பெயர், தரம், பாடசாலையின் பெயர், முகவரி, தொலைபேசிஇலக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.

மாணவர்களது சொந்த படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.

A4 அல்லது A3 தாள்களில் வரையப்படல் வேண்டும்.

பென்சில், கரி, மை, நீர்வர்ணம், க வண்ணக்கோல்கள் (pastel) ஆகியஎந்தவொரு ஊடகத்தினையும் பயன்படுத்த முடியும்

எண்ணிம (Digital) அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டுஉருவாக்கப்படும் படைப்புகள் ஏற்க்கொள்ளப்படாது.

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய இறுதி தினம் – 2025.08.20

பங்குபற்றிய அனைவருக்கும் பங்குபற்றல் சான்றிதழ் வழங்கப்படும்.

வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கப்படும்.

தெரிவு செய்யப்படும் ஓவியங்கள் நல்லூர் உற்சவகாலத்தில் இடம்பெறும்நீர்வளக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

Share this Article