நாளைக்கு அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (அக். 03) வியாழக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மது அருந்துவதால், உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் மட்டும், மது அருந்துவதால் ஒரு நாளுக்கு சுமார் 50 பேர் வரை உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Share this Article