நான்கு கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள்இராணுவ அதிகாரி ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டசம்பவத்தில் குறித்த சந்தேக நபர் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகமவில் முன்னாள் சிறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்மற்றும் பொரளையில் இரண்டு இளைஞர்கள் அண்மையில் கொல்லப்பட்டசம்பவம் உட்பட நான்கு கொலைகளில் தொடர்புடையதாக அவர் மீது சந்தேகம்எழுப்பப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
கடந்த ஓகஸ்ட் 07ஆம் திகதியன்று பொரளையின் சிறிசர உயன பகுதியில்இரண்டு இளைஞர்களைக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியஒருவர், அம்பாறையின் சியம்பலாண்டுவ பகுதியில் இருப்பதாகஸ்ரீஜயவர்தனபுரவில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமின் கூட்டு சிறப்புநடவடிக்கைப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, குறித்த சந்தேக நபர்நேற்று அந்தப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கடந்த ஓகஸ்ட்21ஆம் திகதியன்று பண்டாரகம, துனோதிய பாலத்திற்கு அருகில் முன்னாள்சிறைச்சாலை அதிகாரி லலித் கோடகொடவின் கொலையிலும் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், ஓகஸ்ட் 27ஆம் திகதியன்று பாணந்துறை தெற்கு, அலுபோகஹவத்தபகுதியில் ‘குடு நிலங்க‘வின் மாமனார் கொலையிலும் அவரே ஈடுபட்டிருக்கலாம்என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வாடகைக் கொலையாளி
அதன்படி, ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் மூன்று சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்துள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 10 பைகற் ஐஸ்போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர், 2015ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்என்றும், ‘குடு சலிந்து’, ‘தெஹிபலே ஐயா’, ‘தெஹிபலே மல்லி’ மற்றும் ‘வெலிகமசஹான்’ உள்ளிட்ட பாதாள உலக குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புவைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.