நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலையின் 51ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (ஜனவரி 10) காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில்தலைவர் சி.வீ.கே. சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது, உயிரிழந்த ஒன்பது உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதுடன், மலரஞ்சலி செலுத்தி அக வணக்கம் நிகழ்த்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் வடமாகாண அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில்தலைவருமான சி.வீ.கே. சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் ஆர்னோல்ட், இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this Article