இலங்கையின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான கம்பஹா – கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் மின் பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) மதியம் 12.30 மணியில் இருந்து இலங்கை முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறை சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாலை 05.30 மணிக்கு முன்னர் சீர்செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது