நயினாதீவு கடற்கரையைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனம் விதைகள் கடலரிபினை தடுக்கும் இரண்டாவது முயற்சியாக டிசம்பர் 12 வியாழக்கிழமை நயினை மக்கள் அறக்கட்டளையினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் ஒருவர் குறைந்தது இருபது பனம் விதைகள் கொண்டுவந்து ஒதுக்கப்பட்ட இடத்தில் அவற்றை நாட்டுவதற்கு ஏற்றவாறு மண்வெட்டியும்கொண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இத்திட்டத்தில் இணைந்து செயற்படும் மக்களுள்ளுக்கு சிறு ஊக்கத் தொகையும் வழங்கப்படவுள்ளதாக நயினை மக்கள் அறக்கட்டளை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.