By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தோணிக்கல் இரட்டை கொலை சந்தேக நபர்களுக்கு நிபந்தனையுடன் பிணை!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > தோணிக்கல் இரட்டை கொலை சந்தேக நபர்களுக்கு நிபந்தனையுடன் பிணை!
வன்னிச் செய்திகள்

தோணிக்கல் இரட்டை கொலை சந்தேக நபர்களுக்கு நிபந்தனையுடன் பிணை!

Last updated: 2025/04/28 at 6:56 PM
Published April 28, 2025 48 Views
Share
2 Min Read
SHARE

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம்தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியாமேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாஸ் உத்தரவிட்டார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றிஎரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர்மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின்அடிப்படையில் 6 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப்பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்றஉத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம்மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சார்பில்ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை கோரிபிணை மனுவை சமர்ப்பித்திருந்தார்.

அதற்கு ஆட்சேபனை வெளியிட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தினர் பிணைவழங்குவதற்க்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு வாதங்களைமுன்வைத்திருந்தனர். இருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசேடகாரணங்கள் முன்வைக்கப்படாமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கானவிளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் குறித்த சந்தேக நபர்களுக்குபிணை வழங்கலாம் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைவாக இன்று (ஏப்ரல்28) குறித்த சம்பவத்துடன் தொடர்புடையமுதலாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஒம்பதாம் இலக்க சந்தேக நபர்கள் 5 பேருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.

ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாய் காசு பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய்பெறுமதியான இரண்டு சரீரப் பிணை அதிலும் ஒரு பிணையாளி மனுதரராகஇருக்க வேண்டும் என்பதுடன், இரு பிணையாளிகளும் கிராம அலுவலர் மூலம்தமது வதிவிடத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், எல்லா சந்தேக நபர்களும்மாதாந்தம் கடைசி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி தொடக்ம் மதியம் 12 மணிக்கு இடையில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் தமது வரவைபதிவு செய்ய வேண்டும் எனவும், சந்தேக நபர்களுக்கு நீதிமன்ற அனுமதியின்றிவெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் குடிவரவுகுடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் வவுனியா நீதிவான் நீதிமன்றபதிவாளருக்கு அறிவிக்கும் படியும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

You Might Also Like

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

SUB EDITOR April 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) -2025 தொடரில் வெற்றி வாகை சூடியது DELFT DRAGON!
Next Article உயர்தர மாணவர்களுக்கான பெறுபேற்று மீளாய்வு அறிவிப்பு !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025
வன்னிச் செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?