புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்குட்பட்ட தேராவில் IHGR தேராவில் மாதிரிப்பண்ணையில் இன்று காலை(ஏப்ரல் 19) 10.00 மணிக்கு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் யாமினி தலைமையில் வயல் விழா நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் மாதிரிப் பண்ணையின் விவசாய நடவடிக்கைகள், உற்பத்திகளை பார்வையிட்டார்.
120 ஏக்கர் நிலத்தினைக் கொண்டதும் 5 KM சுற்றளவினையும் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகப் பெரிய பண்ணையாக IHGR மாதிரிப்பண்ணை காணப்படுகின்றது.
தற்போது பெரிய அளவில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயப்பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், புதுக்குடியிருப்பு உதவிப் பிரதேச செயலாளர், பண்ணை முகாமையாளர் திரு.கமலதீபன், விவசாய உத்தியோகத்தர், பண்ணை ஒருங்கிணைப்பாளர், விவசாயப் பெருமக்கள் மற்றும் பாடசாலை மணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.