தேசபந்து தென்னகோன் குற்றவாளி என அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவிசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்துகுற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்துநீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று(ஜூலை 22) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதேவேளை, குறித்த அறிக்கையை அச்சிட்டு பாராளுமன்ற இணையதளத்தில்வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகாரதுஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை தயாரிக்க கடந்த ஏப்ரல் மாதம்விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன குழுவின் தலைவராகபணியாற்றினார்.

நீதிபதி நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்லலித் ஏகநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாகப்பணியாற்றினர்.

இந்த விசாரணைக் குழு 10 தடவைகளுக்கு மேல் கூடி, சாட்சியங்களைச்சேகரித்தது. மேலும், 2025 ஜூலை 16 முதல் தினமும் கூடி, சாட்சியங்களைப்பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது.

இதன்படி, விசாரணைக் குழுவின் சாட்சியப் பதிவு பணிகள் சமீபத்தில்நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, குழுவின் அறிக்கை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம்சமர்ப்பிக்கப்பட்டு, தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

Share this Article