தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று (ஜூலை 30) ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளது.
இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூழில் கிடைக்கபெற்றுள்ளது.
பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ்.ஜெயபாலன் ஆகியோரின் முயற்சியினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பெறுவதற்கு தயாராகும் தாய்மார்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்திய நிபுணர்களின் உதவியுடன் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டு வருகின்மை வழமையாக இருந்துள்ள நிலையில் வைத்திய நிபுணர் சரவணபவன் மற்றும் குழந்தை வைத்திய நிபுணர் ஜெயபாலன் ஆகியோரின் பங்களிப்புடன் சத்திரசிகிச்சை நேற்று (ஜூலை 30) காலை மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக குறிப்பிடும் விடுதி வைத்தியர், அவர்கள் வெகுவிரைவில் வீடு திரும்புவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.