தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை ஹொரணையில் இன்று (ஜனவரி 14) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
புதிய டயர் தொழிற்சாலை வகவத்த ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியில் அதிகமான உற்பத்திகள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டே மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிறியரக கார்களில் இருந்து கனரக வாகனங்கள் வரையில் அனைத்து விதமான டயர்களும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளன.