தீவக பகுதி மாணவர்கள் தனித்துவமுடையவர்கள் – யாழ் அரச அதிபர் தெரிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

தீவக பகுதி மாணவர்கள் தனித்துவமுடையவர்களாக காணப்படுவதகாவும் அவர்களுக்கு கற்பிக்கும் அசிரியர்கள் வினைத்திறனாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து அவர்களை எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டும் என தீவக கல்வி வலய ஆசிரியர்களுக்கான பிள்ளை நேய கற்பித்தல் வாண்மையினை விருத்தி செய்தல் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான செயலமர்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்…

பிள்ளை நேய கற்பித்தல் என்பது நடைமுறையில் ஏற்கனவே காணப்படுவதாகவும் அதனை மேலும் வலுப்படுத்தி விருத்தி செய்யவேண்டிய தேவை காணப்படுவதாகவும் தெரிவித்ததுடன், தீவக பகுதி மாணவர்கள் தனித்துவமுடையவர்களாக காணப்படுவதகாவும் அவர்களுக்கு கற்பிக்கும் அசிரியர்கள் வினைத்திறனாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து அவர்களை எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டும் எனவும் ஆசிரியத்துவம் நோக்கிய செயற்பாடு பிள்ளையின் நன்மை நோக்கியதாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கல்வி செயற்பாடுகளை ஆரோக்கியமான முறையில் மேற்கொள்வதன் ஊடாக பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஆசிரியர்களை தம் மனதிலே இருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்ததுடன் இச் செயலமர்வை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டதுடன் இப் பயிற்சி நெறியை சிறப்பாக பயன்படுத்தி பயனை பெற்றுக்கொள்ளுமாறு மேலும் தெரிவித்தார்.

யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC)  நிறுவனத்தின் அனுசரணையுடன் தீவகத்தின் வேலணை, காரைநகர் ஊர்காவற்துறை நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் ‘சுய உதவிக் குழு அணுகு முறை மூலம் பெண்களை வலுப்படுத்துவதனூடாக சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்’ எனும் செயற்றிட்டத்தின் கீழ் தீவக வலய 25 ஆசிரியர்களுக்கான பிள்ளை நேய கற்பித்தல் வாண்மையினை விருத்தி செய்தல் மற்றும் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறியின்  இரண்டாம் கட்ட செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு  நேற்று( நவம்பர்10)  யாழ்ப்பாணம்  தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் கல்வி அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான  கலாநிதி.பா.தனபாலன், யாழ் தேசிய கல்வியியல்  கல்லூரியின் ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர் கு.கமலநாதன், யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ந.தயாபரன், வேலணை பிரதேச செயலக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நா.கிருஸாந்தினி, யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

Share this Article